
ஹீரோ என்கிற இமேஜ் பார்க்காமல் எந்த கேரக்ரடர் ஆனாலும் நடிப்பேன் என தில்லாக இருக்கிறாரே விஜய்சேதுபதி, அவரது அந்த ஒரிஜினல் கேரக்டர்தான் இன்று அவரை தெலுங்கு திரையுலகத்திற்குள் முதன்முதலாக, அதிலும், சிரஞ்சீவி படத்தில் நடிக்க வாய்ப்பளித்து சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்று இருக்கிறது.
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமாக ‘சயீரா நரசிம்ஹ ரெட்டி’யில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், கன்னட ஸ்டார் சுதீப், சமீபகாலமாக வில்லனாக கலக்கிவரும் ஜெகபதி பாபு, ஆகியோருடனும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளார்.
கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் இந்த கேக்கின் மீது வைக்கப்பட்ட இரண்டு செர்ரி பழங்கள்.. சுரேந்தர் ரெட்டி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.


