தர லெவல்ல கொண்டாந்து இறக்கியிருக்காங்க. காயத்ரியை வெச்சு செய்ய காஜல்தான் சரி. ஆனா அதிருஷ்டவசமா பேபி வெளியப்போயிடுது இந்த வாரம்.
உள்ள வரவங்கள்லாம் ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா ஓவியாவைப் பத்தியே பேசப்பேச காயத்ரி இந்த வாரம் நான் கண்டிப்பா போயிருவேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டா.
இழப்பதற்கு ஏதுமில்லை பிக் பாஸ் வீட்டைத் தவிர
வெச்சி செய்வதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது வாம்மா காயத்ரி வெளிய.
புதுசு புதுசா கூட்டிக்கிட்டு வந்தா இத்தனை நாள் இருந்து கஷ்டப்பட்டதுக்கு என்ன அர்த்தமிருக்கு – காயத்ரியிடம் ஃபில் இட் ஷட் இட் ஃபர்கெட் இட் ஆரவ் உரத்த சிந்தனை.
அடேய் உனக்கு சீனியாரிட்டி பாத்து புரொமோசன் குடுத்து PF கிராச்சுவிடியோட ரிடைர்மெண்ட் பார்ட்டி குடுக்க இது என்ன கவர்ன்மெண்ட் ஆபீசா. ஷோடா. இதுல முக்கியம் உன் இண்ட்டரஸ்ட் இல்லே வியூவர்ஸ் இண்ட்டரஸ்ட். விட்டா வினவை வெச்சி பிக் பாஸ்ல யூனியன் ஆரம்பிச்சிருவான் போலயிருக்கே.
50 நாளைக்கப்பறம் ஒவ்வொருத்தரா இறக்கி, மொத்த செட்டையுமே மாத்திட்டு எண்டுல வின்னர் ஒருத்தர் மேன் ஆஃ த சீரீஸ் மக்கள் சாய்ஸ் ஓவியானு அவார்டு குடுத்து மக்களை சரிக்கட்டப் பாக்கறானோ விஜய் டிவி.
– விமலாதித்தமாமல்லன்