
வாயைத் திறந்தால் வாழ்க்கைத் தத்துவமாகத் துப்பும் சினேகனே சமுத்திரக்கனியின் மார்க்கெட்டை காலி செய்யப் போகிறவர்.
காயத்ரி பாவம் நல்லவளாக நடித்து எனர்ஜியை வீணாக்கிக்கொண்டு இருக்கிறாள்.
யாரைப் பற்றியும் புறணி பேசாமல் கணேஷ் போல மண்ணாந்தையாகவும் இருக்கலாம் ஓவியா போல பட்டாம்பூச்சுயாகவும் இருக்கலாம் சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்.
இரண்டு நாள்கூட ரைஸாவால் ஓவியாவாக நடிக்க முடியவில்லை. எலிமினேட் ஆனபோதுகூட ஜூலியால் ஓவியாவின் செருப்பணிந்து தடுமாறாமல் நடக்க முடியவில்லை.
ஓவியாவுக்கு மாற்றா கொஞ்சம் ஓடுயாடற நமீதாவை இட்டாந்தா அது ஜூலியைவிட ஃபீடிங் பாட்டிலாட்டம் ஓவரா ஆக்ட் பண்ணுதேனு பிக் பாஸே நொந்துக்கறானாம் சுஜா.
ஓவியா இழப்பை சரிக்கட்ட பரணியாட்டம் வேலியைப் பிரிச்சி ஒருத்தனை இறக்கினா வரட்டி வாயைப் பொளக்குது ஓவியாவைப் பாத்த ஆரவ்வாட்டம்.
நாமினேட் ஆகாதவரை புர்க்கா போட்டாப்புல போத்திக்கிட்டிருந்த மாமி காத்தாட உக்கார ஆரம்பிச்சிருக்கு சுஜா வந்தப்பறம் எலிமினேஷன் லீலைகள்.
எல்லாருக்கும் சமையல்னு ஒண்ணுத்த -அப்பளமாட்டம் பூரி பொரிச்சு குடுக்கறாப்புல சமைச்சி போட்டு, இடையிடைல வாழ்க்கைத் தத்துவம் சொல்லிக்கிட்டே பொண்ணுங்களை சைடுல தடவி ஜல்சா பண்ணிக்கிட்டும் இருந்தா, உப்பிட்டவனை உள்ளளவும் நினைனு சமையல் சித்தரா நெனச்சி, நம்மளை நாமினேட் பண்ணமாட்டாங்கங்கிற சினேகனின் திடமான நம்பிக்கையை, மக்கள் உன்னை கட்டிப்பிடி வைத்தியனாக மட்டுமே பார்க்கிறார்கள் எனச் சொல்லி கலைத்துப் போட்டான் புதுமுகம் ஹரிஷ். இந்த வாரம் காயத்ரி வெளியேற்றப்பட்டபின் அடுத்த வார கல்தா சினேகனாக இருக்கலாம் ஆரவ் ரைஸா பிந்து ஹரீஷ் மூலம் நாமுனேட் ஆகிற பட்சத்தில்.
பொம்பள கெட்டா எனுமளவில் புறணி பேசுகின்றன சினேகன் ஆரவ் பொய்யாபுரிகள். நல்லவேளையாக இணையம் இருப்பதால் நாம் தப்பித்தோம்.
பிக் பாஸ் கொடுக்கிற மொக்கை டாஸ்க்குகளைவிட சுஜாவுக்காக இவர்களே உருவாக்கிய டிராமா நன்றாகவே இருந்தது.
– விமலாதித்தமாமல்லன்


