பாடல் வெளியீட்டுவிழாவுக்கு மட்டும் இரண்டுகோடி செலவு? மிரட்டும் மெர்சல் குழு

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார்.இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ஆம் தேதி நடக்க இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த மெர்சல் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விழாவுக்காக நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான மேடை தயாராகி வருகிறது.மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படத்தின் செட்டிங் போல் தயாராகி வரும் இந்த மேடை குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஒ ஹேமாருக்மணி அவர்கள் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செட்டிங் புகைப்படத்தை காண கண் கோடி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆடியோ விழாவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பு விருந்தினர்கள் பங்கு பெறுவார்கள் என்றும் இந்த விழா ஆடியோ விழாவாக மட்டுமின்றி தமிழகத்தையே மிகப்பெரிய திருப்பத்திற்கு ஆளாக்கும் விழாவாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விழாவின் மொத்தச் செலவு சுமார் இரண்டுகோடி ஆகும் என்று சொல்கிறார்கள். ஒரு சின்னப்படமே எடுத்துவிடுகிற தொகையில் பாடல் வெளியீட்டுவிழாவை நடத்துகிறது மெர்சல் படக்குழு.

Leave a Response