அரிது அரிது ஓவியாவாய் பிறப்பது அரிது!


ஊர்ல சில பெருசுங்க இன்னமும் பேஸ்புக்கே பார்க்காம ‘அந்த பேஸ்புக்ல என்ன இருக்கு? சும்மா அதையே பார்த்துகிட்டு’ன்னு கருத்துசொல்லுங்க தெரியுமா?
அவங்களோட வெர்சன் 2 தான் பிக்பாஸ் பாக்காம அதைப்பற்றி கடுப்புடன் புலம்பும் ஆட்கள்!
ஓவியா என்ற ஒரு ஜீவன் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் உள்ளத்தில் குடிகொண்டு ‘வாழ்ந்தா இவள மாதிரி வாழனும்’, ‘ நம்ம புள்ளைங்கள இவள மாதிரி வளக்கனும்’ என நேர்மையை, உண்மையை கொண்டாட வைத்திருக்கிறாள் என்ற அதிசயத்தை புரியாமலே புலம்பலை தொடர்கிறார்கள் என்பதுதான் பரிதாபம் இவ்வளவு நேர்மையான மனதுடன், வெளிப்படையாய் உணர்வுகளை திறந்துகாட்டி, அப்போதும் தன் தனித்தன்மையை இழக்காமல், புன்னகையுடன் வாழுவது அதிசயம்.

அரிது அரிது ஓவியாவாய் பிறப்பது அரிது!

Leave a Response