பெண்ணின் பெயரை தலைப்பாக்கி படம் இயக்கிவரும் சுசீந்திரன்..!


பெரிய நடிகர்களின் படங்களாக இயக்கிவந்த இயக்குனர் சுசீந்திரன், ஒருகட்டத்தில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டபோது தன்னை நிரூபிப்பதற்காக புதுமுகங்களை வைத்து ஆதலால் காதல் செய்வீர் என்கிற படத்தை இயக்கி அதை வெற்றிப்படமாக்கினார். அதன்பின் பாண்டியநாடு தவிர அவரது மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை..

தற்போது அறம் செய்து பழகு’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார் சுசீந்திரன்.. விக்ராந்த், சந்தீப் நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சந்தீப்க்கு ஜோடியாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹ்ரீன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இந்தநிலையில் இந்தப்படத்தை முடித்த கையோடு முற்றிலும் புதுமுகங்களை வைத்து இன்னொரு படத்தையும் சத்தமில்லாமல் இயக்கிவருகிறார் சுசீந்திரன்.. இதில் உள்ளவர்களில் சூரி மட்டுமே ரசிகர்களுக்கு தெரிந்த முகமாம். கல்லூரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் சுசீந்திரன். வரும் நவம்பரில் இந்தப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள சுசீந்திரன், இந்தப்படத்திற்கு ஒரு பெண்ணின் பெயரையே டைட்டிலாக வைக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Response