வெட்டுவோம், குத்துவோம் என்று பேசிய ஆர் எஸ் எஸ் காரர்கள், அதிர்ந்த கொங்கு தலைவர்

ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கொங்குநாடுஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அதுபற்றி அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,,

சாதியை ஒழிப்போம்-சாதி இல்லை என்று சொல்பவர்கள் ஏமாற்று பேர்வழிகள்.பிராமணர் சங்க பொதுக்கூட்டத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு.

எனக்கு முன்னாள் பேசிய பல பிராமண சமுதாயத் தலைவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக வெட்டுவோம்,குத்துவோம் என்று பேசினார்கள்.வேதம் ஓதுபவர்கள்,சைவத்தை உண்பவர்கள்,மக்களுக்கு கடவுளை காட்டுபவர்கள் பிராமணர்கள்.இந்த மிதவாதிகளின் தீவிரவாதப் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது.

பிராமண சமுதாயத்தைப் போல தமிழகத்தில் ஒவ்வொரு சமுதாயமும் கடந்த 50 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியால் சிதறுண்டு கிடக்கின்றது.

தமிழகத்தில் 3% பிராமணர்கள் இருப்பதாக பேசினார்கள்.இந்தியா முழுவதும் ஐயர்,ஐயங்கார்,தவே,பிரம்மட்,திருவேதி,நம்பூதிரி என பல்வேறு பெயர்களில் பிராமணர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவை இந்தியனும்,தமிழகத்தை தமிழனும் ஆள வேண்டும். இந்தியாவை இத்தாலிக்காரர்களும்,தமிழகத்தை ஆந்திராவை,கேரளாவை, கர்நாடகத்தைச் சார்ந்தவர்களும் ஆண்டதன் பலனை நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் நல்ல மாற்றத்திற்கான முன்னேற்றம் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.பெரும்பான்மை சமுதாய மக்களின் பிரதிநிதிகள் நாட்டை ஆள வேண்டும்.சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

பிராமணர்களாகிய நீங்கள் தமிழகத்தை மண்ணின் மைந்தர்கள் ஆள துணை நிற்க வேண்டும்.குஜராத்தைப் போல தமிழகத்திலும் அனைத்து சமுதாயங்களும் அமைதியோடு வாழும்.

என்னை எனது சமுதாய ரீதியாக இங்கு பேச அழைத்துள்ளீர்கள்.நான் கவுண்டர் சமுதாயத்தை சார்ந்தவன்.சாதியை வைத்து சண்டை போடக்கூடாது. சமுதாயத்தை சீரழிக்க கூடாது.மக்களுக்கு நல்ல காரியங்கள் செய்ய நம் சமுதாய மக்களை ஒன்றுதிரட்ட முடியும்.நாம் பிறந்த சாதியை மாற்ற முடியாது.

நமது கலாச்சாரம்,பண்பாடு,சாதியை அடிப்படையாகக் கொண்டது. சாதியில்லை, சாதியை ஒழிப்பேன் என்று சொல்பவர்கள் ஏமாற்று பேர்வழிகள்.இது தான் திராவிடம் என்ற பெயரில் நம்மை ஆள, அவர்கள் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சி.

கொங்குநாடு ஜனநாயக கட்சி, பிராமணர்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும்.சென்னையில் மூன்று பிரமாணர்களின் பூணூல் அறுக்கப்பட்டபொழுது கோவையில் உங்களோடு களமிறங்கி போராடியது கொங்குநாடு ஜனநாயக கட்சி.

எங்கள் வீட்டு கல்யாணத்திலும்,கருமாதியிலும் அனைத்து சமுதாயங்களுக்கும் பங்கு உள்ளது.அதில் உங்கள் சமுதாயத்தின் பங்கு முக்கியமானது.கொங்குமண்டலத்தில் பிராமணர்களுக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி எப்பொழுதும் பாதுகாப்பாக துணை நிற்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response