நீங்கள் பிராமணராக இருப்பதில் தவறில்லை, ஆனால்.. – கமலை வெளுக்கும் கட்டுரை

கமல் தாங்கள் சிறந்த மனிதனாவது எப்போது?

சதா சர்வ காலமும் ஒரு மனித நடிகனாகவே இருக்க முடியுமா ? என நான் வியந்து இருக்கிறேன் கமலகாசனைப் பார்த்து.20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ப்ரிலேன்ஸ் போட்டோ கிராபராக இருந்த போது, இர்ண்டு பத்திரிகைகளின் நிருபர்கள் கமலஹாசனை பேட்டி எடுக்கும் போது நான் புகைபடம் எடுக்க வேண்டும் என அழைத்து சென்றனர்.

ஒன்று தெலுங்கு, மற்றொன்று ஆங்கில பத்திரிகை.இரண்டு பேருக்குமே ஒரே நேரத்தி அவர் அப்பாயிண்ட்மெண்ட் தந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.ஒரு வகையில் வசதியாகவும் ஆயிற்று.

அவர் அலுவலகம் போன பின்பு தான் தெரிந்தது,அங்கு எங்களைப் போல 7 பத்திரிகைக்கு ஒரேனேரத்தில் நேரம் தந்திருந்தார் என்பது.யாரை முதலில் அழைப்பார்,யாரை காக்க வைக்க போகிறார் என்று எல்லோரும் குழம்பினர்.

முதலில் வ்ந்த தெலுங்கு பத்திரிகையிடம் பேச ஆரம்பித்தார்.சற்று நேரத்தில்” ஜஸ்ட் மினிட்,வெயிட் மி பிளிஸ்,”என்கேட்டுவிட்டு தினத்தந்தி நிருபரிடம் சென்றார்.பிறகு அவரை காக்க வைத்துவிட்டு மற்றொருவரிடம் சென்றார்.இப்படியாக இடம் மாறி, ஆள்மாறி பேட்டி கொடுத்து முடித்தார்.

அன்று வந்த வேறு இரு பத்திரிகைக்கும் நான் போட்டோ எடுத்து உதவும் நிலைஏற்பட்டதால் கமலஹாசனின் உண்மையான முகம் வெளிப்பட கண்டு நான் அன்று பெருவியப்பில் ஆழ்ந்தேன்.விஷயம் என்னவென்றால்,கமலின் பேட்டியானது,ஒவ்வொரு பத்திரிகையிடமும், ஒவ்வொரு முகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

.உதாரணத்திற்கு ஒன்று சொல்வதென்றால்,தெலுங்கில் பேசி நடிக்கும் போது,எனக்கு ஏற்படும் சந்த்தோசமும், மன நிறைவும் வேறெந்த மொழியில் நடிக்கும் போதும் கிடைப்பதில்லை…ஆனால் தினத்த்தியிடம் பேசும் போது முற்றிலும் வேறாகப் பேசினார்.

இப்போது ஏன் இது என் நினைவுக்கு வருகிறதென்றால்,விஸ்வருபம் 2 படத்தில்,தமிழில் ஒரு விதமாகவும்,இந்தியில் வேறு விதமாகவும் பேசி அம்பலப்பட்டுவிட்டார்.

நீ முஸ்லீமாக இருப்பதில் தவறில்லை,ஆனால்,தேச துரோகியாக இருக்க கூடாது”என இந்தியில் பேசியுள்ளார்.இப்ப நான் இப்படி சொல்கிறேன் என்று வைத்து கொள்ளுங்கள்; ‘’ கமல் நீங்க பிராமணராக இருப்பதில் தவறில்லை.ஆனால், நானே எல்லோரை விடவும் மேம்பட்டவன் என்ற ஆணவம் தான் கூடாது’’என்றால், என்ன அர்த்தம்.எனக்கு கமலிடம் அப்படிப்பட்ட ஆணவம் இருக்கிறது என்ற புரிதல் தான் என்னை இப்படி பேச தூண்டியுள்ளது,என்பதே உண்மையாகும்.த்மிழில் இப்படி பேசுவதை கவனமாக தவிர்த்துள்ளார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காவேரி விஷயத்தில் 50 வருட பேச்சு வார்த்தைகள் பலனளிக்காமல் போய்…40 வருட நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகு நாம் இறுதியாக வென்றெடுத்த வடிவம் தான் காவேரி மேலாண்மை வாரியம்.இதனால்,இது வரையிலும் நிலவிய அரசியல்,மற்றும் ஆட்சி தலையீடுகள் இருக்காது என்பதே நமக்கு கிடைத்துள்ள ஒரே ஆறுதல்.

ஆனால், அதற்கு வேட்டு வைக்கும் விதமாக கர்னாடக முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்து,பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்போம் என்று பேசுவது எவ்வள்வு பெரிய துரோகம்? அவருடைய விஸ்வருபம் 2 திரைப்படம் கர்னாடகாவில் தடையின்றி திரையிடப்படுவற்காக இப்படி தமிழ் நாட்டு மக்கள் நலனையே பலிகடாவாக்க துணிகிறார் என்றால், இவரெல்லாம் ஆட்சிக்கு வந்தால் எனென்னவெல்லாம் நடக்கும் என்று நினைத்தாலே …
மனம் பதைக்கிறது.

அய்யா கமல் அவர்களே, நீங்கள் சிறந்த கலைஞர். சிறந்த மனிதனாவது எப்போது?

– சாவித்திரி கண்ணன்

Leave a Response