பிரபுதேவாவின் வில்லன் அவதாரம்..!


ஒரு காலகட்டத்தில் தமிழ்சினிமாவை விட்டு பாலிவுட்டே கதி என கிடந்தார் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா. ஆனால் தற்சமயம் பாலிவுட் சினிமாவை ஒதுக்கிவிட்டு தமிழில் தயாரிப்பு, டைரக்சன், நடிப்பு என பிசியாக இருக்கிறார். தற்போது விஷால், கார்த்தியை வைத்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா..

அத்துடன் குலேபகாவலி மற்றும் மெர்க்குரி ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார் பிரபுதேவா.. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெர்க்குரி’ படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளாராம் பிரபுதேவா.. இந்தப்படத்தின் ஷூட்டிங்கை முப்பதே நாட்களில் முடித்துவிட்டார்களாம்.

Leave a Response