கூட்டத்தில் ஒருவன்’ படத்திற்காக கூட்டமாக ஒன்றிணைந்த சூர்யா-விஜய்சேதுபதி..!


ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கூட்டத்தில் ஒருவன்’.. இந்தப்படத்தின் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் விகடன் பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா.

இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள மாற்றம் ஒன்றே மாறாதது பாடல், ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக அமைந்துள்ளது. தற்போது ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை புரமோட் பண்ணும் இந்த பாடல் ஒன்றில் சினிமாவில் முன்னணி கலைஞர்களான சூர்யா, விஜய்சேதுபதி, ஆர்யா, சிவகார்த்திகேயன் என பலர் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.

இப்பாடலில் வரும் வரியான “உன் கேள்விக்கு விடை நீயடா, மண்பானையாய் உடையாதடா“ ,தோல்வியெல்லாம் தோல்வியல்ல, வெற்றி என்றும் தூரமல்ல” போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக்கூடிய வரிகளாக இருக்கும். இப்பாடலை படமாக்கும் போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்களாம்..

அந்த பாடலை ஜூன் 2௦ விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள விஷுவல்ஸ் படத்தில் இடம்பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் விஷுவல்சை எடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.

Leave a Response