சீனு ராமசாமியின் இயக்கத்தில் கடந்த 2015லேயே உருவான படம் தான் ‘இடம் பொருள் ஏவல்’ படம்.. விஷ்ணு, விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா, நந்திதா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தபடத்திற்கு இசையமைத்துள்ளார்.
திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ள இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிந்து இரண்டுவருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருப்பதி பிரதர்ஸ் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்ததால் இந்தப்படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியானது.
இப்போது சீனுராமசாமியின் இயக்கத்தில் வெளியான தர்மதுரை படம் ஹிட்டானதால் இடம் பொருள் ஏவல்’ படத்திற்கு விமோசனம் கிடைக்க வாப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.