உழவர் போராட்டக்களத்தில் தமிழக உழவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து அறவழியில் போராடிவரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் திடீர் கைது. இதற்கு இயக்குநர் அமு.களஞ்சியம் கண்டனம் தெரிவித்துள்ளார் . அவர் எழுதியுள்ள குறிப்பில்,,
மீத்தேன் திட்ட எதிர்ப்பு மக்கள் திரள் போரட்டத்தில் பங்கேற்க சென்றுகொண்டிருந்தபோது கதிராமங்களம் செல்லும் வழியில் குடந்தை புறவழிச்சாலையில் அய்யா பெ.மணியரசன் அவர்ளின் காரை வழிமறித்து கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.
இது மக்கள் விரோத போக்காகும்.
தமிழக அரசே!
விடுதலை செய்!
அய்யா பெ.மணியரசன் அவர்களை உடனடியாக விடுதலை செய்!
அநீதிக்கு எதிராக அறவழியில் சனநாயகமுறையில் போராடும் தலைவர்கள் மீது அடக்குமுறை ஏவாதே….
காவல்துறையின் இந்த செயலை தமிழர் நலம் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.