‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவின் துணிச்சல்..!


இப்போதும் கூட முன்னணி ஹீரோக்கள் நயன்தாராவுடன் ஜோடியாக நடிக்க காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால் 15 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நயன்தாராவோ அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, தற்போது ஒரு ஹீரோவுக்கு அக்காவாக நடிப்பதோடு, 4 வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். காரணம் கதை தான் கதாநாயகன் என்பதில் தெளிவாக இருக்கிறார் நயன்தாரா.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஹீரோ அதர்வாவுக்கு அக்காவாக நடித்துள்ளார் நயன்தாரா. சிபிஐ அதிகாரியாக நயன்தாராவும் அதர்வா டாக்டராகவும், நடித்துள்ளனர். அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இந்தப்படத்தில் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான அனுராக் கஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார்.

Leave a Response