மலையாளத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருகிறது மகாபாரதம்’ படம்.. கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் இந்தப்படம் உருவாவதால் மலையாள நட்சத்திரங்களுடன் பிறமொழி முன்னணி நட்சத்திரங்களையும் இந்தப்படத்தில் இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பீமனின் பார்வையில் நகரும் இந்த கதையின் மைய கேரக்டராகிய பீமனாக மோகன்லால் நடிக்கிறார். இந்த கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றான கர்ணன் ஆக நாகார்ஜுனா நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தை இயக்கும் ஸ்ரீகுமார் மேனன், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தப்படத்தில் நாகார்ஜுனா தான் கர்ணன் ஆக நடிக்க வேண்டும் என கூறி இருந்தாராம்.. அந்தவகையில் இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு எதிர் ரிசையில் இடம்பெறுகிறார் நாகார்ஜூனா.