அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ‘டிமாண்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார்.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா நடித்துவருகிறார்.. தவிர பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.. பலரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாகவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதமாகவும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்திருக்கிறது. காரணம் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப் மூவரும் தங்களது கைகளில் ஆளுக்கொரு முகமூடி வைத்தபடி நிற்கிறார்கள்..
ஆனால் அவர்களை கைகளில் உள்ளது அடுத்தவரின் முகங்களை கொண்ட முகமூடிகள் என்பதுதான் ஆச்சர்யம் ஏற்பட காரணம்.. நிச்சயமாக திரைக்கதையிலும் இந்த அம்சம் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.