‘விவேகம்’ படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது..!


சமீபத்தில் விவேகம் படக்குழுவினர் பல்கேரியாவில் இருந்து தங்களது படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பினார்கள்.. இதனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஒரு பேச்சு கிளம்பியது.. ஆனால் இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாகவும் அதை சென்னையிலேயே நடத்த இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடிக்கும் இந்தப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப்படம் ஆகஸ்ட்-10ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response