தொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நேற்று (நவம்பர் 10) நடந்தது. நேரலையாக நடந்த அந்நிகழ்வு குறித்த விமர்சனம்…..

விஜய் டிவியில், தமிழகத் தமிழன் வெற்றி பெறுவதே பெரும் சிரமம்.அதில் ஈழத் தமிழன் எப்படி வெற்றி பெறுவது?

விஜய் டிவி முதலாளி தமிழன் இல்லை
விஜய் டிவி நடுவர்கள் தமிழன் இல்லை
விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்காகூட தமிழரில்லை
இதில் தமிழகத் தமிழன் வெல்வதே பெரும் சிரமம்
அப்புறம் எப்படி ஈழத் தமிழன் வெற்றி பெற முடியும்?

வியாபாரத்திற்காக போட்டிகளில் ஈழத் தமிழரை சேர்ப்பது.
ஆனால் பரிசு வழங்கும்போது ஈழத் தமிழன் என்பதற்காக நீக்குவது
விஜய் டிவி தொடர்ந்து ஈழத் தமிழரை இவ்வாறு ஏமாற்றி வருகிறது.

இம்முறை சுப்பர் சிங்கர் போட்டியில் முதற்பரிசு பெற்ற தமிழகத் தமிழன் முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

முதற் பரிசு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஈழத் தமிழர் புண்யா அவர்களுக்கு மூன்றாவது பரிசு அதுவும் இன்னொருவருடன் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

இம் முடிவு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இசையமைப்பாளர் அனிருத் அவர்களால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால்தான் வழக்கத்திற்கு மாறாக மூன்றாவது பரிசு பெற்றவர்களுக்கும் தனது இசையில் பாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

விஜய் டிவியின் இந்த மோசடி தொடராமல் தடுக்க வேண்டுமாயின் சுப்பர் சிங்கரின் வெளிநாட்டுச் சுற்றுலாவை புலம்பெயர் ஈழத் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.

குறிப்பு – புண்யா தான் ஈழத் தமிழர் என்று கூறி வோட்டு கேட்கவில்லை. தன் திறமையை மட்டும் காட்டி போட்டியிட்டார். அவர் நிச்சயமாக தமிழர் மனங்களை வென்றுவிட்டார்.

– பாலன்

Leave a Response