விஷ்ணு விஷால் ஜோடியாக தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆனதன் பின்னணி இதுதான்..!


என்னதான் முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டங்களில் இரண்டாம் கட்ட கதாநாயகர்களுடன் நடித்தாக வேண்டிய சூழல் உருவாகியே தீரும்.. நடிகை தமன்னாவும் அப்படி ஒரு சூழலுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டுள்ளார் என்றே தெரிகிறது.

தெலுங்கில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி, பெரிய வசூலை அள்ளிய படம் ‘பெள்ளி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிக்க அவரது ஜோடியாக நடிக்கிறாராம் தமன்னா..

விஷ்ணு விஷாலின் மானேஜர்தான் தமன்னாவுக்கும் மானேஜர் என்பதால் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க தமன்னாவை கமிட் பண்ணி உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தை தமிழில் இயக்கும் திட்டத்துடன் அதன் தமிழ் ரீ-மேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கி வைத்திருந்தார். அவர் ஏற்கனவே இயக்கி வரும் படங்கள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால், தற்போது இந்த படத்தை இயக்கும் பொறுப்பை தன்னுடைய இணை இயக்குனரான செந்தில் வீராசாமியிடம் வழங்கியுள்ளார் கௌதம் மேனன்.

இந்த படத்திற்கு ‘பெண் ஒன்று கண்டேன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம்.

Leave a Response