புரமோஷன் விஷயத்தில் பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திய நயன்தாரா..!


நீண்டகாலமாக தான் நடிக்கும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வரும் நயன்தாரா, தாஸ் ராமசாமி இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘டோரா’ படத்திற்காக தனது பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்தி இறங்கி வந்துள்ளார்.

இந்தப்படம் வரும் மார்ச்-31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப்படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக, படம் வெளியாகும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டோரா கார் போன்று பல வடிவங்களில் கார்கள் வைக்கப்படுகிறதாம்.

அந்தந்த தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்லும் ரசிகர்கள், அந்த காருக்கு அருகே நின்றபடி செல்பி எடுத்து படத்தை தயாரித்துள்ள ஆரா நிறுவனத்துக்கு அனுப்பினால், அவர்கள் நயன் தாரா சந்தித்து டோரா காருக்குள் அமர்ந்தபடி போட்டோ எடுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறதாம்.

ஆனால் காருடன் நின்று செல்பி எடுத்து அனுப்பும் அத்தனை பேருக்குமே அந்த வாய்ப்பு கிடைக்காதாம். குலுக்கல் முறையில்தான் அதிர்ஷ்டசாலி நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களாம்.

Leave a Response