சிங்கம்-3 டீசர் தரும் எதிர்பார்ப்பு என்ன..?


சூர்யா நடித்த படங்களில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படமாக மக்கள் மனதில் முதல் இரண்டு இடத்தை சிங்கம், சிங்கம்-2 ஆகிய இரண்டுமே பிடித்துக்கொண்டன. அப்படியென்றால் சூர்யா-ஹரி கூட்டணியில் தற்போது உருவாகிவரும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கு எத்தனை எதிர்பார்ப்பு இருக்கும்..?

நேற்று வெளியான சிங்கம்-3 (எஸ்-3) படத்தின் டீசரை பார்த்தபோது அதிரடி சண்டைக்காட்சிகளுக்கும் பஞ்ச் வசனங்களுக்கும் பஞ்சம் இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது.. பொதுவாக போலீஸ் படங்கள் என்றால் நாம் ஊரில் வைத்து வில்லன்களுக்கு தண்ணி காட்டுவதுதான் படத்திற்கு விறுவிறுப்பை தரும்..

ஆனால் இந்தப்படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற மாதிரி சூர்யாவை ‘யுனிவர்சல் காப்’ என்றும் டைட்டிலில் குறிப்பிட்டுள்ளனர். வெளிநாடுகளில் என்னதான் ரவுடிகளை துரத்தி அடித்தாலும் நம்ம ஊர் முச்சந்தியில் பொதுமக்கள் முன் வைத்து ரவுடிகளை வெளுத்துக்கட்டும்போது ஏற்படும் திருப்தி ரசிகர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

Leave a Response