
சதுரங்க வேட்டை வெற்றிக்கு பிறகு மனோபாலா உடனடியாக தயாரித்த படம் ‘பாம்பு சட்டை’. ஜிகிர்தண்டா முடித்த கையோடு பாபி சிம்ஹா ஒப்பந்தமான படம். கீர்த்தி சுரேசின் 2வது தமிழ் படம். படம் எவ்வளவு வேகமாக ஆரம்பித்ததோ அதே வேகத்தில் நின்றும் போனது.
அதன்பின் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மனோபாலா படத்தை சினிமா சிட்டி என்ற புதிய நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டார். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தற்போது முடிந்து இந்த வருட இறுதிக்குள் இந்தப்படம் வெளியாக இருப்பதால், அதன் முன்னோட்டமாக டீசரை வெளியிட முடிவு செய்த மனோபாலா, அதை வெளியிடுமாறு விஷாலிடம் கோரிக்கை வைத்தார்.
“இல்லை என்று வருபவர்களுக்கு துணிச்சலோடு உதவுவது மட்டுமின்றி, அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்வது தான் விஷாலின் சிறப்பம்சம். அதனால் தான் அவர் தொடும் எல்லா செயல்களும் வெற்றியில் முடிவடைகிறது….அந்த வகையில் எங்களின் பாம்பு சட்டை படத்தின் டீசரை விஷால் வெளியிடுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது” என கூறியுள்ளார் மனோபாலா..
‘சினிமா சிட்டி’ கே கங்காதரனோடு இணைந்து, அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் திரு அபினேஷ் இளங்கோவன் இந்த படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கி உள்ள இந்தப்படம். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாபி சிம்ஹாவுக்கு முக்கியமான படம்


