ரெமோவை பாராட்டிய அவரது அக்கா சுமோ..!


சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்தியனின் பெண் வேடத்தை ரசிக்காதவர்கள் பாக்கியிருக்க முடியாது.. குறிப்பாக இதுவரை பெண் வேடமிட்டு நடித்த நடிகர்களை ஒப்பிடும்போது சிவகார்த்திகேயன் தான் அந்த வேடத்திற்கு சரியாக பொருந்தியுள்ளார் என பலரும் ஏகோபித்த கருத்தை கூறியுள்ளார்கள்..

இந்த நிலையில் ஏற்கனவே ஒரு படத்தில் பெண் வேடம் போட்டு அசத்திய விவேக், சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார்.. “திறமை, உழைப்பு, சரியான வழிகாட்டிகள் மற்றும் அதிர்ஷ்ட தேவதையின் கண்சிமிட்டல்! இவைகளின் காம்போ சிவகார்த்திகேயன்” என கூறியுள்ள அவர், நான் தான் ரெமோவின் அக்கா சுமோ என கூறி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Response