
சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் ‘மிருதன்’. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது. வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமானார்.
தற்போது இந்தப்படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என டைட்டில் வைத்துள்ளார்களாம். இன்ட டைட்டிலை ஞாபகம் இருக்கிறதா..? ஆம்.. அதேதான்.. 1981ல் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘டிக் டிக் டிக்’. அப்படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக தலைப்பை வாங்கி, தங்களது படத்துக்கு வைத்திருக்கிறார்கள். விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கவிருக்கின்றனர். நேமிசந்த் ஜபக் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.


