ஈழக்கவிஞர் சேரன் காலமானார்

உருத்திரமூர்த்தி சேரன் சமகாலத் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியமான ஈழத்துக் கவிஞர்,நாடக ஆசிரியர், இதழாளர் மற்றும் சமூகவியல் பேராசிரியர் ஆவார்.ஈழத்தின் புகழ்பெற்ற நவீன கவிஞரான மஹாகவி
து.உருத்திரமூர்த்தி மகனாவார்.கவிஞர் ஒளவையின் சகோதரனுமாவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் அறிவியல் ( Biological Sciences) பட்டம் பெற்ற இவர், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) சமூகவியலில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றார். தற்போது கனடாவிலுள்ள வின்சர் பல்கலைக்கழகத்தில் (University of Windsor) சமூகவியல் மற்றும் மானுடவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார்
1980-களில் இலங்கையில் தீவிரமடைந்த இனப்போராட்டம், யாழ் நூலக எரிப்பு, இடப்பெயர்வு, போரின் துயரங்கள், மனித உரிமைகள் மற்றும் காதல் ஆகியவற்றை தனது கவிதைகளில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன், டச்சு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இரண்டாவது சூரிய உதயம்
யமன்
எலும்புக் கூடுகளின் ஊர்வலம்
எரிந்து கொண்டிருக்கும் நேரம்
நீ இப்பொழுது இறங்கும் ஆறு
மீண்டும் கடலுக்கு
காடாற்று
அஞர்
திணைமயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்
ஆகிய கவிதை நூல்கள் எழுதியுள்ளார்.

கவிஞர் சேரனின் சகோதரி ஒளவை, எங்கள் சின்னண்ணா ( சேரன். உருத்திரமூர்த்தி) இன்றிரவு கனடாவில் மாலை 8:26 க்கு காற்றோடு கலந்தார். இதை எங்கள் உறவினர்களுக்கும், அன்பு நண்பர்களுக்கும் மிகுந்த துயருடன் அறிவிக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

Leave a Response