விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இல்லை – உண்மையை உடைக்கும் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி உரு​வான 2011 இல் இருந்து நடை​பெற்ற அனைத்து சட்​டப்பேரவைத் தேர்​தல்​களி​லும் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்​தார்.கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலை​யில்,கட்​சி​யின் பொதுச்செய​லா​ளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால்,அக்​கட்​சி​யில் இருந்து வில​கியதுடன்,சமஉ
பத​வியையும் துறந்தார்.உடனே ஆளும்கட்சியில் இணைந்​தார்.இப்போது அக்கட்சியின், விராலிமலை தொகுதியை உள்​ளடக்கிய மேற்கு மாவட்​டச் செய​லா​ளராக உள்​ளார்.

விராலிமலை உள்​ளிட்ட 5 தொகுதி​களில் விரைவில் இடைத்​தேர்​தல் அறி​விக்​கப்​பட உள்ள நிலை​யில்,
விஜயபாஸ்​கர் சார்​பில் எவர்​சில்​வர் பாத்திரம், குலோப் ஜாமூன் டின், தவெக சின்​னமான விசில் ஆகிய​வற்றை விஜயபாஸ்​கர் படத்​துடன் கூடிய துணிப்பையில் வைத்​துத் தொகுதி முழு​வதும் அவரது ஆதர​வாளர்​கள் விநியோகித்து வரு​கின்​றனர்.

இது​குறித்து விஜயபாஸ்​கர் ஆதர​வாளர்​கள் கூறும்​போது,இடைத்​தேர்​தலில் தவெக சார்பில் விஜயபாஸ்கரே
போட்​டி​யிடுவார்.அதற்​காக தொகுதி முழு​வதும் தீவிர​மாக விளம்​பரம் செய்து வரு​கிறோம்.வாக்​காளர்​களின் கவனத்தை ஈர்ப்​ப​தற்​காகப் பரிசுப்பொருட்​கள் விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன என்​றனர்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்​தில் செய்​தி​யாளர்​களிடம் திமுக முன்​னாள் அமைச்​சர் ரகுபதி
கூறிய​தாவது….

விராலிமலை தொகுதிக்கு தேர்​தல் தேதி அறி​விக்​க​வில்லை.வேட்​பாளர் அறி​விக்​க​வில்லை.ஆனால்,முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் அனைத்து குடும்ப அட்​டைதா​ரர்​களுக்​கும் எவர்​சில்​வர் பெரிய பாத்​திரம்,அதற்​குள்
ஸ்​வீட் பாக்ஸ்,ரசகுல்லா டின் ஆகிய​வற்றை வைத்து வீட்​டுக்கு வீடு கொடுத்​துள்​ளார்.ஒரு வீட்​டுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்​புள்ள பொருட்​களை முதல்கட்​ட​மாக விநியோகிக்​கத் தொடங்கியிருக்​கிறார்.

இது​தான் தூய்​மையான ஆட்சியா?.ஓட்​டுக்கு எது​வுமே கொடுக்கமாட்​டோம் என்​றார்​கள்.ஆனால்,விஜயபாஸ்​கர் 90 ஆயிரம் குடும்ப அட்​டைதா​ரர்​களுக்​கும் வீடு தவறாமல் பொருட்​களை கொடுத்​துக் கொண்​டிருக்​கிறார்.அது​த​விர
மற்​றவர்​களுக்கு எல்​லாம் ரொக்​க​மாக பணம் கொடுக்​கிறார்.தேர்​தல் எப்​போது வருமோ தெரிய​வில்லை.இப்​பவே
பட்​டுவாடா ஆரம்​பிச்​சிட்​டாங்​க.எத்​தனை கோடியை அங்கே கொட்​டப் போகிறார்​கள் என்​பதைப் பார்க்கவேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

விஜய்க்கு மக்கள் செல்வாக்கு நிறைய இருக்கிறதென்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.அதனால் பணம்,பரிசு கொடுத்துத்தான் வெற்றி பெற முடியும் என்றெண்ணி இப்போதே பணத்தை அள்ளி இறைத்துக்கொண்டிருகிறார் விஜயபாஸ்கர் என்கிற விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

Leave a Response