மருத்துவர் இராமதாசுவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, பாமக நிறு​வனர் மருத்துவர் இராம​தாசு, புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்றக் கழகப் பொதுச் செய​லா​ளர் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர்.

இரண்டகங்களால் பாதிக்கப்பட்ட இருவரும்​ இணைந்து தேர்​தலைச் சந்​திக்​கும் நிலை​யில் அவரது அணி சார்​பில் போட்​டி​யிடும் முதல்​கட்ட வேட்​பாளர் பட்​டியலை மருத்துவர் இராம​தாசு அறி​வித்​துள்​ளார்.

அதன் விவரம்…

சேலம் மேற்கு தொகு​தி​யில் மாநில இணைப் பொதுச் செய​லா​ளர் அருள் (தற்போது சட்டமன்ற உறுப்பினர்),
வந்​த​வாசி (தனி) தொகு​தி​யில் மாநில பொதுச் செய​லா​ளர் முரளி சங்​கர், கும்​பகோணம் தொகு​தி​யில்
மாநில நிர்​வாகக் குழு உறுப்​பினர் ம.க.ஸ்​டா​லின், விருத்​தாசலம் தொகு​தி​யில் மாவட்டச் செய​லா​ளர் சுரேஷ்,
மயி​லாடு​துறை தொகு​தி​யில் மாவட்டச் செய​லா​ளர் பாக்​கம் சக்​திவேல் ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவர்களில் 3 வேட்பாளர்கள் அன்புமணி வேட்பாளர்களுடன் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மேற்கு பாமக (அன்புமணி) வேட்பாளர் மு.கார்த்தியை எதிர்த்து சேலம் அருள் சமஉ, விருத்தாசலத்தில் தமிழரசி ஆதிமுலத்தை எதிர்த்து சுரேஷ், மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிசாமியை எதிர்த்து பாக்கம் சக்திவேல் ஆகியோர் மருத்துவர் இராமதாசு தரப்பு பாமக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

Leave a Response