பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லை – இந்துஸ்தான் பெட்ரோலியம் அறிக்கை

ஈரான் மீது இஸ்ரேல்,அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்தும் திடீர் தாக்குதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் எரிவாயு உருளை விலை ரூ.60 உயர்ந்தது. வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.115 உயர்ந்தது.

இந்நிலையில் அடுத்து நாட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது வேண்டுமென்றாலும் உயரக் கூடும் என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே காணப்படுகிறது. அதேநேரம், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், நாட்டில் எந்த பெட்ரோல் பல்க்கிலும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என தகவல் தெரிவிக்கின்றது.

இதுதொடர்பாக இந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்….

பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம். நாடு முழுவதும் உள்ள அனைத்து HPCL பெட்ரோல் பங்குகளும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்லது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ? என அஞ்சி மக்கள் பங்குகளில் குவிந்துவரும் நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Leave a Response