
தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி.
அதற்கடுத்த இடத்தில் விஜய் தொலைக்காட்சியும் மூன்றாமிடத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியும் இருந்துவருகின்றன.
நான்காவது இடத்தில் கே தொலைக்காட்சியும் ஐந்தாமிடத்தில் விஜய் சூப்பர் தொலைக்காட்சியும் பிடித்துவந்தது.
சிற்சில மாற்றங்களுடன் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வரிசைப்படியே தொலைக்காட்சிகள் இடம்பிடித்து வந்தன.
அண்மையில், இந்த வரிசையில் மாற்றம் ஏற்பட்டு, முதல் ஐந்து தொலைக்காட்சிகளில் கலைஞர் தொலைக்காட்சி இடம்பிடித்திருக்கிறதாம்.
கலைஞர் தொலைக்காட்சி முதல் ஐந்து தொலைக்காட்சிகளில் ஒன்றாக இடம்பெற்றது எப்படி?
கலைஞர் தொலைக்காட்சி மேல் பல வழக்குகள் இருந்தன. அதன் காரணமாக அவர்கள் புதிய திரைப்படங்களை வாங்காமல் நிறுத்தி வைத்திருந்தார்கள்.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் தொலைக்காட்சி புத்துயிர் பெற்றது. அதன்பின்,புதிய திரைப்படங்களை வாங்கத் தொடங்கியது கலைஞர் தொலைக்காட்சி.
அதுமட்டுமின்றி நெடுந்தொடர்களில் பல மாற்றங்கள் செய்து அவற்றிற்கும் புதுஇரத்தம் பாய்ச்சியிருக்கிறார்கள்.
இவற்றின் காரணமாக கலைஞர் தொலைக்காட்சி முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறதாம்.
