
பீகார் தேர்தல் முடிவுகளில், பாரதிய ஜனதா, ஒருங்கிணைந்த ஜனதா தளம் கூட்டணி, 125 இடங்களில் வெற்றி. மொத்த இடங்கள் 243. பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் கூடுதலாகப் பெற்று இருக்கின்றது.
பாஜக 72 இடங்களில் வெற்றி. மேலும் இரண்டு இடங்களில் முன்னிலை.
ஒருங்கிணைந்த ஜனதா தளம் 42 தொகுதிகளில் வெற்றி. மேலும் 1 தொகுதியில் முன்னிலை.
கூட்டணி உடன்படிக்கையின்படி, நிதீஷ்குமார்தான் முதல்வர் எனப் பரப்பு உரை செய்தார்கள். தங்கள் கட்சி கூடுதல் இடங்கள் பெற்றாலும், அவரே முதல்வர் என பாஜக அறிவிப்பு.
லாலு பிரசாத் நிறுவிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.
அவர்களுக்கு, 110 இடங்கள் கிடைத்து உள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி.
காங்கிரஸ் 19. கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி 19 இடங்களில் போட்டியிட்டு, 12 வெற்றி.
சிபிஎம், சிபிஐ கட்சிகள் தலா இரண்டு இடங்களில் வெற்றி.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் 23 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதல் இடம்.
அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, 5 இடங்களில் வெற்றி. அவருடன் கூட்டணி அமைத்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கூட்டணி 1.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, தனித்து 150 இடங்களில் போட்டியிட்ட, லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது.
ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், தங்கள் கட்சி பெருவெற்றி பெறும்…பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பேன் என்று பேசி வந்தார். அவரது தந்தையார் மறைவுக்குப் பின்னர், நடுவண் அமைச்சரவையில் இடம் பிடிக்கின்ற வாய்ப்பும் இல்லாமற் போய்விட்டது.
அசாதுதீன் ஓவைசி கட்சி, பெரும்பாலான தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்து, பாஜக வெற்றிக்கு வழி வகுத்து இருப்பதாகத் தெரிகின்றது. அதேவேளையில், சிராக் பஸ்வான் பிரித்த வாக்குகளால்,
நிதீஷ்குமார் கட்சி நிறைய இடங்களில் தோற்று இருக்கின்றது.
லாலுவின் மகன் தேஜஸ்வி, தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கின்றார்.
பஸ்வான் மகன் மற்றும் ஓவைசி ஆகியோரால் வாக்குகள் சிதறி,
வெற்றியை நெருங்கி, வாய்ப்பை இழந்து இருக்கின்றார்.


