வையாபுரிக்கு பிக்பாஸ் நண்பர்கள் கொடுத்த அதிர்ச்சி..!


பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் நடிகர் வையாபுரி. இந்த நிகழ்ச்சிக்குப் பின் நடிகர் வையாபுரி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான வையாபுரி நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே பிக்பாஸ் வீட்டை விட்டுப் போகிறேன் என அழுது கொண்டே இருந்தார். அதனால் மக்களிடம் பெரிய அனுதாபத்தை சந்தித்தார்.

இதனால் 80 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் படாமல் இருந்தார். தற்போது, வையாபுரி சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு-2’ படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி ஒன்றில், ‘‘பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, போட்டி முடிந்து வெளியே வந்தாலும், நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருப்போம், ஒன்றாக ஊர் சுற்றுவோம் என கூறியவர்கள். இப்போது என் போன் அழைப்பை கூட எடுப்பதில்லை’’ என வருத்தத்துடன் புலம்பியுள்ளார்.

Leave a Response