இரண்டொரு வாரங்களில் ஓவியா கிளம்பி விடுவார்

பிக் பாஸ்
அடுத்த சீஸனின் மனுஷ்ய புத்திரனை எதிர்பார்க்கலாம் என பலர் சொல்கிறார்கள். விஜய் டிவி அந்த அளவுக்கு மற்ற சேனல்களைப் பகைத்துக் கொள்ளாது. ஓரிரண்டு மாதம் மனுஷ்ய புத்திரன் இல்லாவிட்டால் மற்ற சேனல்கள் இல்லாமல் போய் விடுமே? அதிலும் கலைஞர் டிவி? ம்ஹும். அப்படி ஒரு விபரீதம் நடக்க வாய்ப்பில்லை.

அந்தப் பதினைந்து பேரில் நான் ஒருவனாக இருந்தால் நூறு நாள் தாக்குப் பிடிப்பேன் என்றேன் தோழியிடம். நூறு மணி நேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது என்றார். நம்மைப் பற்றிய நம்முடைய மதிப்பீட்டுக்கும் மற்றவரின் மதிப்பீட்டுக்கும் எத்தனை வித்தியாசம், ஹா!

ஓவியா ஜூலியாக மாறியதைக் கண்டேன். அநேகமாக இரண்டொரு வாரங்களில் ஓவியா கிளம்பி விடுவார். ஆனால் ஓவியா கிளம்பி விட்டால் நிகழ்ச்சியின் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்து விடும். என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஓவியா இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்.

அநேகமாக எண்பதாவது் நாள் வரை காயத்ரி தாக்குப் பிடிப்பார். அநேகமாக சிநேகனே போட்டியில் வெல்வார். இறுதிப் போட்டியில் காயத்ரியையும் சிநேகனையும் எதிர்பார்க்கிறேன்.

கமல் பார்ப்பனர் பார்ப்பனர் என்று திட்டுவார். ஆனால் அவரிடம் சாதி அபிமானம் நிறையவே உண்டு. காயத்ரியை அவர் ஆதரிப்பதற்கு இதை விட வேறு எந்த நியாயமான காரணமும் எனக்குத் தெரியவில்லை. தவறாக இருந்தால் கமல் என்னை மன்னிக்க வேண்டும்.

-சாருநிவேதிதா

Leave a Response