ஓவியாவுக்கு கமல் இழைக்கும் அநீதி

நீங்கள் நீங்களாக இருங்கள் என்று பிக் பாஸ் சொல்லி அனுப்பினார் எனவே நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம் என்கின்றன காயத்ரி சினேகன் சக்தி வகையரா அடிக்கடி பெருமையுடன் எல்லா கேவலங்களையும் செய்துகொண்டு.
அவர்கள் அவர்களாகவே இருப்பது எவ்வளவு கேவலமாக இருந்திருக்கிறது என்பது வெளியில் வந்த பிறகு, அவர்கள் வாழ்ந்த விதத்தை அவர்களே ரீவைண்ட் பண்ணி பார்க்கும்போதுதானே தெரியப் போகிறது.
வாழ்வில் ஓரளவு வெற்றியைப் பெற்ற ஒருத்தன்கூட நான் நானாகவே இருந்து வெற்றிபெற்றேன் என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதே உண்மை உங்களுக்கும் எனக்கும் உட்பட. ஏனினில் ஷோக்காக மட்டுமே இருக்க ரியாலிடி ஷோ இல்லை வாழ்க்கை -அது ரியல்‬. வாழ்க்கையில் ரீவைண்ட் ஆப்ஷன் இல்லை. இருப்பினும் மனதிற்குள் ஓட்டிப்பார்த்துக் கொள்ளக்கூட ஒருவரும் தயாரில்லை -குறிப்பாக வெற்றிபெற்ற ஒருவர்கூட.

பாய் பிரெடுடன் பிரேக்கப் ஆனது பற்றி ஆர்த்தியிடம் குறிப்பிட்டபோது போகாத இமேஜும், தம்மடிக்குமிடத்தில் இருந்த தவளையைக் கண்டு பதறியபோது போகாத இமேஜும், எலிமினேட் ஆனால் சரக்கடிக்கலாம் என்ற ஆரவிடம் பெங்களுருக்கு ஃபிளைட் புக் பண்ணுங்க என்று மேக்கப் போட்டபடியே சொன்னபோது வராத கெட்டப்பெயரும், ஓவியா நடித்துக் காட்டும் போதுதான் மக்களிடம் போய்விட்டது என்று ரைஸா அழுது புலம்பியது ஜூலித்தனம்.
ஏம்மா ரைஸா பிக் பாஸ்ல என்னா குலமகள் ராதை யார்னா போட்டி நடக்குது. சினிமா ஃபீல்டும் மாடலிங் ஃபீல்டும் அப்பழுக்கில்லாத ஒழுக்க வாதிகள் வாழுமிடம்னு நெனச்சுக்கிட்டா நாங்க உங்களையெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கோம்னு நினைக்கிறே.

குடும்பப் பின்னணி காரணமாக காயத்ரி, சக்தியின் தவறுகளை ஜூலியைப் போல செக்மேட் செய்யாமல் வழுக்கிச் செல்வது பரணி ஓவியாவுக்கு கமல் இழைக்கும் அநீதி

–– விமலாதித்தமாமல்லன்

Leave a Response