மணிரத்னத்துக்கு காப்பி அடிக்கக்கூடத் தெரியல – வெளுக்கும் எழுத்தாளர்

செக்கச் சிவந்த வானம். இடைவேளை வரை வந்துள்ளது. கொல போர். சிம்பு வரார். போறார். பிரகாஷ் ராஜ் பேசறார். விஜய் சேதுபதி வரார். கத்துறார். அர்விந்த் சாமி வரார். கத்துறார். சுடுறாறாங்க. சுடுறாங்க. பாண்டில ஒரு ரு பிராத்தல். நூறு பெண்கள். மணிக்கும் வாழ்க்கைக்கும் தூரம் அதிகமாச்சு.

செக்கச் சிவந்த வானம். இடைவேளைக்குப் பிறகும் அறுவை தான். செம போர். செம தண்டம்.

2013-இல் Park Hoon-jung இன் இயக்கத்தில் வெளிவந்த New World என்ற கேங்க்ஸ்டர் படத்தின் ஈயடிச்சான் காப்பி தான் செக்கச் சிவந்த வானம். கொடுமை. காட்சிக்குக் காட்சி காப்பி.

பிரகாஷ் ராஜ் மாதிரியே ஒரு கேரக்டர். சிம்பு மாதிரியே ஒரு கேரக்டர். விஜய் சேதுபதி மாதிரியே ஒரு போலீஸ். அதே கதை. அதே காட்சிகள். ஒவ்வொரு கேரக்டரின் உடல் அசைவுகள் கூட அதே மாதிரி. நியூ வேர்ல்டில் எல்லோரும் கொரிய பாஷை பேசுகிறார்கள். மணி ரத்னம் படத்தில் தமிழ் பேசுகிறார்கள் என்பதுதான் வித்தியாசம்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், நியூ வேர்ல்ட் அட்டகாசமான படம். ஜெட் வேகத்தில் பறக்கிறது. பாவம். மணி ரத்னத்துக்குக் காப்பி கூட அடிக்கத் தெரியவில்லை. இப்படிப்பட்ட காப்பிகேட் ஆட்கள்தான் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

– சாருநிவேதிதா

Leave a Response