
விக்ரம் நடித்த படங்கள் பலவும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது. அதற்கு இரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த வரிசையில் கடந்த வருடம் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்த ‘இருமுகன் ’என்ற படம் தற்போது ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017 ’ என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது..
இந்தபடம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. அதன் பின்னர் யூடியுப்பில் வெளியானது. வெளியான நாற்பத்தெட்டு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. அதிலும் நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த படத்தை லட்சகணக்கானவர்கள் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள்.


