“35 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்வேன்” ; கௌதம் கார்த்திக்


இளம் நாயகன் கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படம் வெளியாகி ஓடிகொண்டு இருக்கிறது.. இவன் தந்திரன் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.. இந்தநிலையில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் கௌதம் கார்த்திக். இந்த சந்திப்பில் தன மீது இதுநாள் வரை ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார் கௌதம்.

“நான் படித்து வளர்ந்தது எல்லாம் கோ எஜுகேஷன் பள்ளியில்.. அந்த அடிப்படையில் தான் நடிகை ப்ரியா ஆனந்துடன் நட்பாகத்தான் பழகினேன்.. படத்தில் நடிக்க வரும் முன்பே அவரை எனக்கு தெரியும். ஆனால் அதைப்போய் காதல் என்று சொன்னால் எப்படி..?

எனது தாத்தா முத்துராமன், அப்பா கார்த்திகை போல நானும் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன்.. ஆனால் அது இப்போதல்ல. 35 வயதுக்குப்பின்னர்தான் நடக்கும்.. அதுவரை சினிமாவில் கவனம் செலுத்தி ஒரு நல்ல இடத்திற்கு வரும் வேலைகளை மட்டுமே பார்ப்பேன்” என கூறியுள்ளார் கௌதம் கார்த்திக்.

Leave a Response