சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தோஷப்படுத்தியவர் தான் அந்த நிகழ்ச்சியை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி. அதன்பின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக சேர்ந்து, தொழில் கற்று தற்போது அவரது தயாரிப்பிலேயே ‘ரங்கூன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். வரும் ஜூன்-9ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.
வடசென்னையை பின்புலமாக கொண்டு பின்னப்பட்டுள்ள இந்த கதையில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். ர்பாஜ்குமார் இந்த கதையை தயார் செய்யும்போதே அவர் மனதில் ஹீரோவாக இருந்தவர் கௌதம் கார்த்திக் தான். ஆனால் ராஜ்குமாரை போட்டிபோட்டுக்கொண்டு அழைத்த இரண்டு நிறுவனங்கள் இந்தப்படத்தை தாங்களே தயாரிப்பதாக முன்வந்தனவாம்.
ஆனால் வடசெனை கதைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் கௌதம் கார்த்திக் செட்டாக மாட்டார் என சொல்லி வேறு ஹீரோவை மாற்றும்படி சொன்னார்களாம். ஆனால் ராஜ்குமாரோ அதற்கு மறுத்துவிட்டு முழுக்கதையையும் தயார் செய்துகொண்டு தனத்னது குருநாதர் முருகதாஸிடம் சொல்ல, அவர் தயாரிப்பதாகவும் கௌதம் கார்த்திக்கே ஹீரோவாக நடிக்கட்டும் என்றும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.
படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ராஜ்குமாரின் நம்பிக்கையை கௌதம் கார்த்திக் காப்பாற்றி விட்டார் என்றே தோன்றுகிறது.