கடந்தவருடம் நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது.. அதை தொடர்ந்து ராம்குமார் என்பவன் போலீஸில் சிக்கியதும், கைதனாதும் சிறையில் அடைக்கப்பட்டதும், பின் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்ததும் என அடுத்தடுத்து அதிரடி நிகழ்வுகள் நிகழ்ந்தன.
இன்னும் கூட ராம்குமார்தான் உண்மை குற்றவாளியா அல்லது கொலையாளி வேறு யாரோவா என்கிற சந்தேகத்திற்கு சரியான விடை கிடைத்தபாடில்லை. இந்நிலையில் இந்த கொலைவழக்கு சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சுவாதி கொலைவழக்கு’ என்கிற பெயரிலேயே படமாக இயக்கியுள்ளார் ரமேஷ் செல்வன்.
சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லரை பார்த்தபோது படத்தின் கதாபாத்திரங்களையும் ஒரிஜினல் பெயர்களிலேயே அமைத்துள்ளார் ரமேஷ் செல்வன்.. இந்தப்படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் என சுவாதியின் தந்தை ஒருபக்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்க, இன்னொரு பக்கம் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஷால், இந்தப்படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட தன்னால் ஆன உதவிகளை செய்வதாக வாக்கு கொடுத்துள்ளார்.