இந்தியில் ஆளுநர்உரை -கன்னடர்கள் கடும் எதிர்ப்பு

மோடி தலைமை அமைச்சரானது முதல் வெறிகொண்டு இந்தித் திணிப்பைச் செயல்படுத்திவருகிறார். இந்தியஒன்றியமெங்கும் அதற்கான வேலைத் திட்டங்களைச் செய்துவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்தியவரலாற்றில் இதுவரை இல்லாத வகையில்  பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கவுள்ள கர்நாடக சட்டமன்ற கூட்டுக்கூட்டத்தில் தனது உரையை இந்தியில் ஆற்றப்போவதாக ஆளுநர் வாஜுபாய் வாலா அறிவித்திருக்கிறார். இதற்கு கடும்கண்டனம் எழுந்திருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் ஏற்கனவே தங்கள் அதிருப்தியை தெரிவித்திரு்ககிறது. பாஜகவினர் சிலரும் தங்கள் அதிருப்தியை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். கன்னட அமைப்புகளான கர்நாடக ரட்சண வேதிகே போன்றவை எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தியுள்ளன. கன்னட எழுத்தாளர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் உள்ள எம்எல்ஏக்களில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே இந்தி தெரியும் என்றும் பெரும்பாலானவர்களுக்கு அது புரியாது என்றும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்திருக்கின்றன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உரையை படிப்பதற்குக்கூட தெரியாதவரை எப்படி, அதுவும் ஒரு தென் மாநிலத்துக்கு, ஆளுநராக்கினார்கள் என சில கன்னடர்கள் கேள்விகேட்கிறார்கள். ஆளுநரால் இந்தியில் உரை நிகழ்த்துவது சட்டபூர்வமாக தவறில்லை என்றாலும், அப்படி ஒரு மரபை உருவாக்க தாங்கள் விரும்பவில்லை என்றே கர்நாடக அரசியல்வாதிகள் கருதுகிறார்கள்.

 

Leave a Response