கவிஞர் வைரமுத்து தம்பியின் ரவுடித்தனம்!

விடுதலைச்சிறுத்தைகள் செய்தித்தொடர்பாளர் வன்னியரசுவின் பதிவு.

கவிஞர் வைரமுத்து தம்பியின் ரவுடித்தனம்!
கடலூர் மாவட்டம் இந்திரா நகர், ரெட்டியார் தெருவைச்சேரந்தவர் திருமதி ஜெயந்தி. தனது கணவரை இழந்த அவர் தாயுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர் திரு.பாண்டியன. இவர் திட்டக்குடி தாலுகா டிஎஸ்பி யாக காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். கவிஞர் வைரமுத்து அவர்களின் உடன் பிறந்த தம்பி என்பது சிறப்பு தகவல். ஜெயந்தி வீட்டில் இருந்து வருகிற சாக்கடை நீர் திரு.பாண்டியன் வீட்டு வழி வருவதாக அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த 24ம் தேதி பாண்டியன் தனது படை பரிவாரங்களுடன் ஜெயந்தி வீட்டுக்குள் புகுந்து கடுமையாக தாயையும் மகளையும் கதற கதற தாக்கியள்ளனர். அதாவது ஜெயந்தியையும் அவரது அம்மாவையும் தாக்கியதோடு, காவல்துறையில் தனக்கு உள்ள செல்வாக்கை வைத்து வழக்கும் போட்டு, கைது செய்து சிறைப்படுத்தவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். எந்த ஆதரவுமற்ற- படு காயமுற்ற நிலையில் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் மருத்துவமனையில் காவல்துறையை வைத்து கடும் தொல்லை கொடுத்து வருகிறார். பெண் என்றும் பாராமல் தொல்லை கொடுத்து வரும் காவல் அதிகாரி பாண்டியனின் மனித நேயமற்ற இப்போக்கை மனிதநேயமுள்ளவரகள் தான் கண்டிக்க வேண்டும். அல்லது கவிஞர் வைரமுத்து அவர்கள் தான் கண்டித்து பாண்டியனுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் !

-வன்னி அரசு.

Leave a Response