
விதம்விதமான கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து வித்தியாசமான நடிப்பை கொடுத்து வரும் விஜய்சேதுபதி. அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்று வித்தியாசமாக டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
‘காமெடி கலந்த வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படம் இது என்பதால் இப்படி வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறேன்’ என்று கூறுகிறார் இப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார். இப்படத்தின் நாயகியாக நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினரான நிகரிகா என்ற ஆந்திரா அழகி நடிக்கிறாராம்


