“ப.பாண்டி ரீமேக்ல நடிங்க” ; மோகன்பாபுவுக்கு ரஜினி ஐடியா..!


நடிகராக இருந்த தனுஷ், ‘ப.பாண்டி’ மூலம் இப்போது இயக்குனராகவும் மாறிவிட்டார்.. நாளை இந்தப்படம் வெளியாக இருக்கிறது.. சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தை பார்த்த ரஜினி தனுஷின் டைரக்சனி ரொம்பவே பாராட்டியுள்ளார்.

அது மட்டுமல்ல, தன்னுடைய நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை சென்னைக்கு அழைத்து ப.பாண்டி படத்தை பார்க்க வைத்திருக்கிறார் ரஜினி. படத்தைப் பார்த்து மிரண்டுபோன மோகன்பாபுவிடம், ப.பாண்டி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும்படி சொன்னாராம் ரஜினி.

அவரது விருப்பத்தின்படி ப.பாண்டி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு நடிக்க ஒப்புக்கொண்டதாகவும்,. இந்த ப.பாண்டி உருவாக ஆரம்பத்திலிருந்தே தனுஷுடன் உடனிருந்த சுப்பிரமணியசிவா தான் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response