மசூதியில் சூர்யா ; வதந்திக்கு முற்றுப்புள்ளி..!


நடிகர் சூர்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது, ஆனால் இதை சூர்யா தரப்பு மறுத்துள்ளது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலத்திற்கு வருகிறார். அவருக்கு சில மரியாதைகள் எல்லாம் செய்யப்படுகிறது.

பின்னர் அவர், அங்கு வழிபாடு நடத்துவது போன்று அந்த வீடியோ உள்ளது. சுமார் 3 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது. இதை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டார் என்று ஒரு தகவலை பரப்பி வருகின்றனர்.

‛சிங்கம்-2 படப்பிடிப்புக்காக சூர்யா ஆந்திராவில் இருந்தபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த அழைப்பின் பேரில் கடப்பாவில் உள்ள தர்காவிற்கு சென்று வந்தார். அப்போது தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டது,

இதை தவறாக புரிந்து கொண்டு சிலர் சூர்யா மதம் மாறிவிட்டார் என்று செய்தி பரப்பி வருகின்றனர். சூர்யா மதம் எதுவும் மாறவில்லை, அந்த செய்தி தவறானது என்று சூர்யா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது

Leave a Response