ஆர்கேநகர் நாம்தமிழர்கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் – சீமான் அறிவிப்பு

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நடக்கும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் இ.மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கி இருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார்.

தி.மு.க. சார்பில் மருது கணேசும், பாரதீய ஜனதா சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரனும், தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் மதிவாணனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்.லோகநாதனும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக
கலைக்கோட்டுதயம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழன் தொலைக்காட்சி உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் 8 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

இதுதவிர ஜல்லிக்கட்டு போராட்ட குழுவினர் தொடங்கிய ‘என் தேசம் என் உரிமை’ கட்சியின் சார்பில் சமூக ஆர்வலர் ஜெயந்தி சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Leave a Response