
எத்தனையோ இளம் கதாநாயகிகள் அறிமுகமாகிக் கொண்டு இருந்தாலும், த்ரிஷாவுக்கு வரும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளது. இந்த 2017ல் மட்டும் 7 படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ள்ள, த்ரிஷா தற்போது நடித்து வரும் இந்த 7 படங்களும் 2017ம் ஆண்டிலேயே வெளியாகும் என்றே கூறப்படுகிறது.
தற்போது டுவிட்டரில் தான் நடிக்கவுள்ள புது படங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். த்ரிஷா தனி கதாநாயகியாக நடிக்கும் ‘மோகினி’, அரவிந்த் சாமியுடன் நடிக்கும் ‘சதுரங்க வேட்டை 2’, கதாநாயகிக்கு முக்கிய்த்துவம் உள்ள ‘கர்ஜனை, 1818’, விஜய் சேதுபதியுடன் ‘96’, நிவின் பாலியுடன் மலையாளத்தில் அறிமுகமாகும் ‘ஹே ஜுட்’, விக்ரமுடன் ‘சாமி 2’ என 7 படங்களில் தற்போது நடித்து வருவதாக த்ரிஷா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பலத்த எதிர்ப்பை சந்தித்த பின்னரும் த்ரிஷா இத்தனை படங்களில் நடிக்கிறார் என்றால் ஆச்சர்யமான விஷயம் தான்..


