
சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் அடித்து சத்தியம் செய்வது அல்லது சபதம் எடுப்பது உண்மையில் ஒரு இனத்தின் குறியீடு…
இந்த மாதிரியான குறியீடுகள் தம் பண்பாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தம் சந்ததியினருக்கு கடத்திவரும் பூர்வீக இனக்குழுக்களுக்கான தனித்துவ அடையாளங்கள்…
இதற்கு எந்தப் பயிற்சியும் இருந்ததில்லை…
இறந்தால் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது, ஒப்பாரி வைப்பது, ஆராத்தி எடுத்து வீட்டுக்கு வெளியில் ஊற்றுவது, பெண்கள் பூர்ப்பு எய்தினால் குழவை சத்தம் எழுப்புவது, மண்ணை வாரி தூற்றுவது எல்லாம் தமிழ் குடியின் உணர்ச்சி வெளிப்பாடு… இதில் உணர்ச்சி என்ற மனித இயல்பு தான் பண்பாட்டு அடையாளங்களை மூடநம்பிக்கையிலிருந்து வேறுபடுத்துகின்றன… இந்த அடையாளங்கள் சில சமயம் எல்லா இனக்குழுக்கழுக்கும் பொதுவாய் அமைவதுண்டு… உதாரணமாய் திருமணம்… இது உலகின் எல்லா இனக்குழுக்களுக்கும் பொதுவாய் இருப்பது அதன் தொன்மையை கணக்கிட உதவுகிறது…
இன்று வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்று எண்ணுகின்ற, மேற்கத்திய மேல்தட்டு சமூக இயக்கத்தை நோக்கிப் பயணம் செய்கின்ற தலைமுறைக்கு இந்தக் குறியீடுகள் புரியாமல் இருக்கலாம்… ஆனால் அந்தக் குறியீடு தமிழ் இனத்துக்கு எதிரான கூட்டத்திற்கு புரிகிறது… இந்த அடையாளங்களை அழிக்கும் போரில் ஒரு சிறு முன்னேற்றத்தை எதிரியான ஆரியம் அடையும் போதும்கூட அதில் தோற்கும் ஒரு சாமானியனும் தம் அடையாளத்தை தூக்கிப் பிடிப்பதே இந்த பார்ப்பனர்களை வெறுப்படையச் செய்துள்ளது…
உண்மையில் இதை ஒரு போராய் பண்பாட்டு ரீதியில் நம் மீது ஆரியம் நடத்தி வருகிறது… ஆனால் நாம் இதை மீம் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறோம்…
அரசியல், பண்பாட்டு புரிதல் இல்லாமல் ஒரு படித்த தலைமுறை இருக்குமேயானால், நம் அடையாளத்தை நம்மை அறியாமலே நாம் இழப்போம்…
