சனவரி 25 அன்று தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் மொழி உரிமைப் பேரணி

10.1.14  அன்று  நடந்த தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

1. சனவரி 15, 2015, முதல் மொழிப்போர் ஈகி நடராசன் நினைவுநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில், காலை 11 மணிக்கு, நடராசன் உள்ளிட்ட ஈகியர்க்கு நினைவேந்தல் செலுத்தி, மொழிப்போர் சூளுரை ஏற்றல் – மொழி உரிமை ஆண்டு 2015 இன் தொடக்க நிகழ்வாகவும் இது இருக்கும்.

2. சனவரி 25, மொழிப்போர் ஈகியர் நாளன்று காலையில், 10 மணிக்கு மூலக்கொத்தளத்தில் உள்ள நடராசன்-தாளமுத்து நினைவிடத்தில் நினைவஞ்சலியும் பிற்பகல் 3 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் மொழி உரிமை பேரணியும் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்தலும்

3. சனவரி 25 அன்று தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கூட்டியக்கத்தின் சார்பில் மொழிப்போர் ஈகியர் நாளை சிறப்பாக கடைப்பிடித்தல். இதற்காக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்களை அமைத்தல்.

இந்த மூன்று செயல்பாடுகளுக்கான வேலைகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. தோழர்கள் அவற்றுக்காக தனித்தனிப் பொறுப்புகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டியக்கத்தில் இதுவரை இணையாத அமைப்புகளைச் சந்தித்தித்து அவர்களைச் சேர்த்தலும் அனைவரும் இணைந்து இச்செயல்பாடுகளை நிறைவேற்றுதலும் நம் முன் உள்ள முதல் கடமையாகும்.

பல்வேறு அமைப்புகள் தனித்தனியே மொழி உரிமைக்கான, நினைவேந்தலுக்கான நிகழ்வுகளை நடத்தும் அதே வேளை ஒன்றிணைந்தும் சில செயல்பாடுகளைச் செய்யவேண்டியிருக்கிறது. எனவே தோழமை ஆற்றல்கள் கைகோர்த்து நிற்கவேண்டும் என விரும்புகிறோம்.

Leave a Response