மத்திய அரசின் விலங்குகள் குறித்த சட்டத்தின் 22-வது பிரிவிலிருந்து காளையை நீக்க வேண்டியிருக்கிறது தமிழக அரசு- சீமான் தகவல்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவை நடத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,  சீமான் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளை நாம் தமிழர் கட்சி மனமார பாராட்டுகிறது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்த சட்ட ரீதியான போராட்டங்களை தீவிரமாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அதிகாரிகள் மூலமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தை அணுகி, விலங்குகள் குறித்த 22-வது பிரிவிலிருந்து காளையை நீக்கும்படி வேண்டியிருப்பதும் தமிழர்களின் மனதில் ஆறுதல் வார்த்திருக்கிறது.

இத்தகைய தொடர் முயற்சிகளின் மூலமாக தமிழக அரசால் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உரிய அங்கீகாரத்தை நிச்சயம் பெற்றுக்கொடுக்க முடியும். ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும், தமிழக அரசின் கோரிக்கைகளை மதித்தும் மத்திய அரசு ஜல்லக்கட்டுக்கு உரிய அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும். இந்த வருடப் பொங்கல் விழாவிலேயே ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

Leave a Response