
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ‘தெய்வீக காதல்’ என்கிற புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பரமஹம்ச யோகானந்தரின் “தெய்வீக காதல்” ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டார். தவிர இந்த நிகழ்வில் ஆன்மீக விஷயங்கள் குறித்து அரைமணி நேரம் பேசியும் உள்ளார்.
இதுநாள் வரை தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் ஏதேச்சையாக அவ்வப்போது சில புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும் கூட ஒரு புத்தகத்தை படித்துவிட்டு, அந்த விழாவில் புத்தகத்தை வெளியிடுவதற்காகவே கலந்துகொள்வது இதுதான் முதன்முறை என்றும் ரஜினி குறிப்பிட்டார்.


