விக்ரம் படத்தில் இருந்து விலகினார் சாய்பல்லவி..!


சிம்புவை வைத்து வாலு’ என்கிற படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இருந்தப் படத்தில் காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார். இது வடசென்னை ரவுடி சம்பந்தப்பட்ட கதை என்று சொலப்படுகிறது.. இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக சாய்பல்லவி ஒப்பந்தமானார். அதையடுத்து அவருக்கு அட்வான்சும் கொடுக்கப்பட்டிருந்தது.

வரும் பிப்ரவரி 6ம் தேதி சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது. சாய்பல்லவி தெலுங்கு படங்களில் நடித்து வருவதால் மார்ச் மாதம் கால்சீட் தருவதாக சொன்னார். அதற்கேற்றபடி படக்குழுவும் சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில், தற்போது மார்ச் மாதமும் தன்னால் கால்சீட் தர முடியாது என்று கூறியுள்ளார். தற்போது விக்ரம் படத்திலிருந்து அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டனர். சாய் பல்லவியும் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டார் என்று சொலப்படுகிறது.

Leave a Response