ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பிப்ரவரிக்கு தள்ளிப்போன சிவலிங்கா..!


பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் ‘சிவலிங்கா’. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சிவலிங்கா’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தில், ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்தள்ளார்.

ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங்குடன் பி.வாசுவின் மகன் ஷக்தி வாசு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி பொங்கல் அன்று ரிலீசாகவிருந்த சிவலிங்கா படத்தை ஒருவாரம் தள்ளி வைத்து ஜனவரி 26 அன்று வெளியிட முடிவு செய்திருந்தனர்.

அதற்காக சில தினங்களுக்கு முன் சென்சாருக்கு அனுப்பப்பட்டது சிவலிங்கா. படத்தைப் பார்த்த சென்சார் யு சான்றிதழ் வழங்கியது. சென்சார் முடிந்த கையோடு சிவலிங்காவுக்கு தியேட்டர்கள் புக் பண்ணத் தொடங்கியவர்கள் தற்போது அந்தப் பணியை நிறுத்திவிட்டனர்.

காரணம் சிவலிங்கா படம் ஜனவரி 26 அன்று வெளிவரவில்லையாம். தற்போது மாணவர்களின் எழுச்சி காரணமாக தியேட்டர்களில் கூட்டமில்லை. எனவே இப்போது படத்தை ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாராம் தயாரிப்பாளர்.

Leave a Response